சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்- தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்

மராட்டியத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு
தேசியவாத காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைவர் சரத்பவார் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.
இதுகுறித்து மாநில நீர்வளத்துறை மந்திரியும், கட்சியின் மாநில தலைவருமான ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், "மராட்டியத்தில் பல சமூகத்தினர் குறித்த சமூக நிலையை அறிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சரத்பவார் தலைமையில் நடந்த மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அனைத்துக்கட்சி கூட்டம்
இந்த விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் 6 இடங்களுக்கான ராஜ்ய சபா தேர்தல், 10 சட்ட மேலவை தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள ராஜ்ய சபா தேர்தலுக்கான தங்களது 3-வது வேட்பாளரை பா.ஜனதா வாபஸ் பெறும் என நம்புகிறோம்" என்றார்.






