அடுத்த மாதம் மாநில அரசில் மிகப்பெரிய மாற்றம் நிகழும்; எதிர்க்கட்சி தலைவர் ஆரூடம்


அடுத்த மாதம் மாநில அரசில் மிகப்பெரிய மாற்றம் நிகழும்; எதிர்க்கட்சி தலைவர் ஆரூடம்
x
தினத்தந்தி 19 Aug 2023 7:00 PM GMT (Updated: 19 Aug 2023 7:01 PM GMT)

அடுத்த மாதம் மாநில அரசில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

அடுத்த மாதம் மாநில அரசில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தெரிவித்து உள்ளார்.

ஆட்சியில் இணைந்த அஜித்பவார்

மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் மாநில அரசில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் சேர்ந்தார். அவர் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். இதையடுத்து அஜித்பவார் விரைவில் முதல்-மந்திரியாக உள்ளதாக தகவல்கள் பரவின. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே குடும்பத்துடன் சென்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

மாநில அரசில் மாற்றம்

இந்தநிலையில் அடுத்த மாதம் மராட்டிய அரசில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " முக்கியமான இடத்தில் மாற்றம் இருக்கும். ஆட்சி மாறும் என நான் கூறவில்லை. ஆனால் முக்கியமான நாற்காலியில் அடுத்த மாதம் மாற்றம் இருக்கும் " என்றார். மராட்டிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டேக்கு பதிலாக அஜித்பவார் மாற்றப்படுவார் என கடந்த சில நாட்களுக்கு விஜய் வடேடிவார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக நீடிப்பார் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து இருந்தார்.


Next Story