சிறுமிகளை செல்போன் நம்பர் கேட்ட 2 வாலிபர்களுக்கு ஓராண்டு சிறை


சிறுமிகளை செல்போன் நம்பர் கேட்ட 2 வாலிபர்களுக்கு ஓராண்டு சிறை
x

சிறுமிகளை பின்தொடர்ந்து சென்று செல்போன் நம்பர் கேட்ட 2 வாலிபர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பையை சேர்ந்த 2 சிறுமிகள் கடந்த 2013-ம் ஆண்டு அங்குள்ள வடபாவ் கடையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது 19 வயதுடைய 2 வாலிபர்கள் சிறுமிகளை நெருங்கி செல்போன் நம்பர் தருமாறு கேட்டனர். இதற்கு மறுத்த சிறுமிகள் அங்கிருந்து சென்றனர். இருப்பினும் வாலிபர்கள் சிறுமிகளை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் பயந்து போன சிறுமிகள் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தனர். உடனே அவர்கள் சிறுமிகளை விரட்டி சென்ற 2 வாலிபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானது. இதன் பேரில் 2 வாலிபர்களுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story