'நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பது தான் எங்களின் இந்துத்வா'- உத்தவ் தாக்கரே பேச்சு


நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பது தான் எங்களின் இந்துத்வா- உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 17 April 2023 6:45 PM GMT (Updated: 17 April 2023 6:46 PM GMT)

நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பது தான் எங்களின் இந்துத்வா என நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசினார்.

மும்பை,

நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பது தான் எங்களின் இந்துத்வா என நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசினார்.

நாக்பூரில் பொதுக்கூட்டம்

மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் பொது கூட்டம் நேற்று முன்தினம் இரவு நாக்பூரில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், அம்பாதாஸ் தான்வே, தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத், காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் நானா படோலே, பாலாசாகிப் தோரட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர் சுனில் கேதார் செய்து இருந்தார்.

எங்களின் இந்துத்வா

கூட்டத்தில் 3 கட்சிகளையும் சேர்ந்த திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

ஒரு பக்கம் அவர்கள் அனுமன் பஜனை பாடுகிறார்கள். மறுபுறம் மசூதியில் போதனை கேட்கின்றனர். அது தான் அவர்களின் இந்துத்வாவா?. உத்தரபிரதேசத்தில் உருது மொழியில் 'மன் கி பாத்' நடத்துகின்றனர். நாட்டுக்காக வாழ்க்கையை அர்பணிப்பது தான் எங்களின் இந்துத்வா. நான் காங்கிரசுடன் சென்று இந்துத்வாவை கைவிட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.

காங்கிரசில் ஒரு இந்து கூட இல்லையா?. அவர்களின் (பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.) இந்துத்வா பசு கோமிய இந்துத்வா.

கோமியம் குடிக்க வேண்டும்

இந்துத்வா தேசியநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். சமீபத்தில் நாங்கள் அவுரங்காபாத்தில் பொதுக்கூட்டம் நடத்திய இடத்தில் பா.ஜனதாவினர் கோமியத்தை தெளித்தனர். அவர்கள் அந்த கோமியத்தை குடித்து இருக்க வேண்டும். அப்போது தான் இந்துத்வா தேசியம் சார்ந்தது என்பது அவர்களுக்கு உணர்ந்து இருக்கும். பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்-மந்திரி அயோத்தி செல்கிறார். பா.ஜனதா ஜனநாயகத்தின் நெறிமுறைகளை கொன்று வருகிறது. அந்த கட்சிக்கு நெருங்கிய நண்பர்களுக்கு (அதானி) உதவி செய்வது தான் ஜனநாயகம். மோடி அரசின் செயல்பாடு குறித்து கேள்வி கேட்டபோது ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. பல பிரச்சினைகளில் மோடியை கேள்வி கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால் எந்த நேரமும் ஜெயிலில் அடைக்கப்படலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story