குடிநீர் வழங்கும் பார்வி அணை நிரம்பியது- உபரி நீர் வெளியேற்றம்


குடிநீர் வழங்கும் பார்வி அணை நிரம்பியது- உபரி நீர் வெளியேற்றம்
x

தானே மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் பார்வி அணை நிரம்பியது. அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அம்பர்நாத்,

தானே மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் பார்வி அணை நிரம்பியது. அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணை நிரம்பியது

தானே மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் பார்வி அணையின் உயரம் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணை நேற்றுமுன்தினம் முழு கொள்ளவை எட்டி நிரம்பியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ந் தேதியில் 82 சதவீதம் நிரம்பி இருந்தது. செப்டம்பர் மாதம் 6-ந் தேதி அணை நிரம்பியது. இந்த ஆண்டு உயரம் அதிகரிக்கப்பட்டு இருப்பினும், முன்கூட்டியே அணை நிரம்பி உள்ளது.

உபரி நீர் வெளியேற்றம்

அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் 8 கதவுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இது பற்றி மாநகராட்சி அதிகாரி கூறுகையில், "அணையில் 334 மில்லியன் கனமீட்டர் அளவிற்கு நீர் தேக்கப்பட்டு உள்ளது. அணையில் நீர்வரத்து அதிகமானால் கண்காணிக்கப்பட்டு அங்குள்ள 11 கதவுகளும் திறக்கப்படும்" என்றார்.

இந்த அணையில் இருந்து தானே நகரம் மற்றும் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி, உல்லாஸ்நகர் மாநகராட்சி, மிராபயந்தர் மாநகராட்சி, பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி, நவிமும்பை மற்றும் மாவட்டத்தின் சில கிராமபுறங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story