லாத்தூரில் புகைப்பட கண்காட்சி


லாத்தூரில் புகைப்பட கண்காட்சி
x

பிரிவினை கொடுமைகள் நினைவு தினத்தை முன்னிட்டு லாத்தூரில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

லாத்தூர்,

இந்தியாவில் இருந்து தனி நாடாக பாகிஸ்தான் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி பிரிந்தது. அந்த நாளை அந்நாட்டு சுதந்திர தினமாக பாகிஸ்தானியர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், இந்த பிரிவினையின்போது ஏற்பட்ட வலிகளை நினைவுக்கூரும் விதமாக இந்தியாவில் அந்நாள் பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்தநிலையில் பிரிவினை கொடுமைகள் நினைவு தினத்தை குறிக்கும் வகையில் லாத்தூரில் 3 நாள் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் பிரத்விராஜ் தொடங்கி வைத்தார். விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

1947-ம் ஆண்டு நடந்த பிரிவினையின்போது ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் கடும் துயருக்கு ஆளானார்கள். இவர்களை நினைவு கூறும் வகையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிரிவினையின்போது லட்சக்கணக்கான மக்கள் அனுபவித்த துன்பங்கள் மற்றும் வலிகளை இங்குள்ள புகைகப்பட கண்காட்சி காட்டுகிறது. இது கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்ச்சி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story