பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 5 பேரின் போலீஸ் காவல் 3-ந் தேதி வரை நீட்டிப்பு


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 5 பேரின் போலீஸ் காவல் 3-ந் தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 27 Sep 2022 1:15 AM GMT (Updated: 27 Sep 2022 1:15 AM GMT)

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 5 பேரின் போலீஸ் காவலை அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 5 பேரின் போலீஸ் காவலை அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

என்.ஐ.ஏ. சோதனை

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.), அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த 22-ந் தேதி நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ., அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தியது.

மராட்டியம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உள்பட 15 மாநிலங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது. மொத்தம் 93 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மராட்டியத்தில் மட்டும் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் காவல்

இதில் பயங்கரவாத தடுப்பு படையால் கைது செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளில் 5 பேரின் போலீஸ் காவல் நேற்று முடிந்தது. அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவின் கோரிக்கையை ஏற்று அவர்கள் மீதான காவலை அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இவர்கள் மீது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது, இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை தூண்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


Next Story