பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை


பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

2-ந் தேதி முதல் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மும்பை,

2-ந் தேதி முதல் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை

மராட்டிய மாநில பயிற்சி டாக்டர்கள் சங்கத்தினர் வருகிற 2-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் சுகாதாரத்துறை மந்திரி கிரிஷ் மகாஜனுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மராட்டியத்தில் 1,432 சீனியர் பயிற்சி டாக்டர்கள் பதவி உருவாக்கப்பட வேண்டும். 2018-ம் ஆண்டு முதல் உள்ள சம்பள நிலுவை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

வேலை நிறுத்தம்

இதுதொடர்பாக நாக்பூரில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை எனில், வருகிற 2-ந் தேதி முதல் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story