காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்; மாணவியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது


காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்; மாணவியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2023 12:30 AM IST (Updated: 5 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

காதலை ஏற்க மறுத்த மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

காதலை ஏற்க மறுத்த மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காதல் விவகாரம்

பால்கர் மாவட்டம் வசாய் பகுதியில் உள்ள கல்லூரியில் 19 வயது மாணவி படித்து வந்தார். மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் அமன் மாதேஷியா(19) என்ற வாலிபர் காதலித்தார். ஆனால் மாணவி அவரின் காதலை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் மாணவியை கன்னத்தில் அறைந்து உள்ளார். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுத்து உள்ளது. எனினும் அவர் மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி

இந்தநிலையில் சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அமன் மாதேஷியா அத்துமீறி மாணவியின் வீட்டுக்குள் நுழைந்தார். அவர் மாணவியிடம் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். மாணவி மீண்டும் வாலிபரின் காதலை ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், மாணவியை சரமாரியாக தாக்கினார். மேலும் வீட்டின் குளியல் அறைக்கு இழுத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். பின்னர் அவர் மாணவியின் செல்போனை பறித்துவிட்டு தப்பிசென்றார். இந்தநிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார். மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து வாலிவ் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அமன் மாதேஷியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


1 More update

Next Story