வளர்ப்பு மகளை கற்பழித்தவருக்கு 20 ஆண்டு சிறை- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


வளர்ப்பு மகளை கற்பழித்தவருக்கு 20 ஆண்டு சிறை- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.ஏ. பரிசோதனை அடிப்படையில் வளர்ப்பு மகளை கற்பழித்தவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மும்பை,

டி.என்.ஏ. பரிசோதனை அடிப்படையில் வளர்ப்பு மகளை கற்பழித்தவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சிறுமி கர்ப்பம்

மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமி அவரின் தாயின் உதவியுடன் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது வளர்ப்பு தந்தை மீது போலீசில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.

இதில் தனது வளர்ப்பு தந்தை தன்னை 2019-ம் ஆண்டு முதல் கற்பழித்து வந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். இதையடுத்து போலீசார் சிறுமிக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவர் 16 வார கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் வளர்ப்பு தந்தையை கைது செய்ததுடன், அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மன்னிக்க விருப்பம்

இந்த வழக்கு விசாரணை போக்சோ கோர்ட்டில் நீதிபதி அனில் கான் முன்பு நடந்து வந்தது. விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் திடீரென தாயும், மகளும் வழக்கில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.

அவர்கள் கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர், எனவே அவரை மன்னித்து, சிறையில் இருந்து விடுவிக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

கொடூரமான குற்றம்

இருப்பினும் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி, டி.என்.ஏ. அறிக்கையின் அடிப்படையில் வளர்ப்பு மகளான சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட சிறுமியின் கருவின் உயிரியல் தந்தை குற்றம் சாட்டப்பட்டவர் தான் என்பதை டி.என்.ஏ. அறிக்கை தெளிவாக கூறியுள்ளது.

18 வயதுக்குட்பட்ட தனது வளர்ப்பு மகள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கடுமையான மற்றும் கொடூரமான குற்றத்தை செய்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் அவர் தனது தாயின் உணர்ச்சிவசப்பட்ட அழுத்தத்திற்கு ஆளாகிறார் என்பதை நிரூபிக்க போதுமானது. எனவே தான் அவர் சம்பவங்களை மறுத்துள்ளார்.

இதுபோன்ற வித்யாசமான சூழ்நிலையில் டி.என்.ஏ. சோதனைகள், விசாரணை ஆகியவை குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்தை நிரூபிக்கும் ஒரு சிறந்த கருவியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story