விமான நிலையத்தில் ரூ.1.60 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; கென்யா நாட்டு பெண் கைது


விமான நிலையத்தில் ரூ.1.60 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; கென்யா நாட்டு பெண் கைது
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:46 PM GMT)

மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 60 லட்சம் தங்ககட்டிகளை கடத்தி வந்த கென்யா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 60 லட்சம் தங்ககட்டிகளை கடத்தி வந்த கென்யா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

தங்கம் பறிமுதல்

மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஒன்று தறையிறங்கியது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதில் வந்த பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த கென்யா நாட்டை சேர்ந்த சகாரா ஓமர்(வயது40) என்ற பெண் பயணியின் உடைமைகளை வாங்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்காததால் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். இதில், அவர் உள்ளாடை மற்றும் உடலில் பிளாஸ்டிக் டேப்பினால் ஓட்டி 3 கிலோ 404 கிராம் எடையுள்ள ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கென்யா நாட்டு பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த தங்கம் கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story