துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற வீரருக்கு ரூ.2 கோடி பரிசு- மராட்டிய அரசு அறிவிப்பு


துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற வீரருக்கு ரூ.2 கோடி பரிசு- மராட்டிய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2022 6:45 PM GMT (Updated: 20 Oct 2022 6:45 PM GMT)

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற வீரருக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது..

மும்பை,

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் மராட்டியத்தை சேர்ந்த ருத்ராங்ஷ் பாட்டீல் கலந்து கொண்டார். அவர் இத்தாலியின் டேனிலோ டெனிஸ் சொலாசோவை 17-13 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு உலக துப்பாக்கி சுடுதலில் இந்த பிரிவில் தங்கம் வென்றவர் ருத்ராங்ஷ் பாட்டீல் ஆவார்.

இந்தநிலையில் உலக துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற ருத்ராங்ஷ் பாட்டீலுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது. மாநில மந்திரி சபை 18 வயதில் தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்த ருத்ராங்ஷ் பாட்டீலுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.



Next Story