நவிமும்பையில் ரூ.48 கோடி போதைப்பொருள் பறிமுதல்; 8 மாதத்தில் நடவடிக்கை
நவிமும்பையில் கடந்த 8 மாதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ரூ.48 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
மும்பை,
நவிமும்பை தலோஜா பகுதியில் வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிராம் மெபட்ரோன் போதைப்பொருளை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் இருந்த 49 வயது நபரை கைது செய்தனர். அவர் போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி வந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நவிமும்பையில் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் கடத்தியதாக 982 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், ரூ.48 கோடி அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story