நவசேவா துறைமுகத்தில் ரூ.365 கோடி போதைப்பொருள் பறிமுதல்-போலீசார் தீவிர விசாரணை


நவசேவா துறைமுகத்தில் ரூ.365 கோடி போதைப்பொருள் பறிமுதல்-போலீசார் தீவிர விசாரணை
x

நவசேவா துறைமுகத்தில் கன்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.365 கோடி மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மும்பை,

நவசேவா துறைமுகத்தில் கன்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.365 கோடி மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள்

நவிமும்பையில் நவசேவா துறைமுகம் உள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் போதை பொருள்கள் கன்டெய்னரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் பழைய மும்பை - புனே நெடுஞ்சாலையில் யார்டு பகுதியில் கப்பலில் இருந்து வந்து இறங்கிய கன்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், ஒரு கன்டெய்னரில் மர்ம பொருள் பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் ஆய்வுக்கு அனுப்பினர். அப்போது, அந்த மர்ம பொருள் தடைசெய்யப்பட்ட மோர்பின் போதைப்பொருள் என்பது தெரியவந்தது.

ரூ.365 கோடி மதிப்பு

இதைத்தொடர்ந்து அங்கிருந்த 73.06 கிலோ எடைகொண்ட போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.365 கோடி என கூறப்படுகிறது.

மராட்டியத்தில் போலீசார் மிகப்பெரிய மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் பஞ்சாப் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story