முதியவரை கொன்று கொள்ளையடித்து சென்ற வேலைக்காரர் கைது

முதியவரை கொன்று நகைகளை திருடி விட்டு தப்பி சென்ற அவரது பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
முதியவரை கொன்று நகைகளை திருடி விட்டு தப்பி சென்ற அவரது பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
முதியவர் கொலை
மும்பை சாந்தாகுருஸ் பகுதியை சேர்ந்தவர் முரளிதர் நைக் (வயது85). இவர் கடந்த 8-ந்தேதி இவர் கைகால்கள் துணியால் கட்டப்பட்டு படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பார்த்த போது தங்கநகைகள், வாட்சு போன்ற பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் முரளிதரின் பராமரிப்பாளர் கிருஷ்ணா பெரியர் (30) என்பவர் தலைமறைவாகி விட்டதாக தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு அவர் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரை பிடிக்க போலீசார் 10 தனிப்படைகளை அமைத்தனர். விசாரணையில், கிருஷ்ணா பெரியர் சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பி சென்றது தெரியவந்தது.
ஆமதாபாத்தில் பிடிபட்டார்
அந்த ரெயில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் ரெயில் நிலையம் சென்ற போது கிருஷ்ணா பெரியரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல முயன்றதாக தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து மும்பை அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் முரளிதர் நைக்கை கொலை செய்து பொருட்களை கொள்ளை அடித்து சென்றதை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து கொள்ளை அடித்த பொருட்களை பறிமுதல் செய்தனர். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






