ஷிண்டே ஆட்சியை கலைத்து விட்டு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - நானா படோலே வலியுறுத்தல்

ஷிண்டே ஆட்சியை கலைத்து விட்டு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - நானா படோலே வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 July 2023 7:45 PM GMT (Updated: 13 July 2023 7:45 PM GMT)

ஷிண்டே ஆட்சியை கலைத்துவிட்டு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,

ஷிண்டே ஆட்சியை கலைத்துவிட்டு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.

ஜனாதிபதி ஆட்சி

மராட்டியத்தில் சிவசேனா-பா.ஜனதா மற்றும் பிளவுப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் மாநிலத்தில் அரசு நிர்வாகம் முடங்கி கிடப்பதாகவும், ஏக்நாத் ஷிண்டே அரசை கலைத்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

விவசாயிகள் தற்கொலை

மாநில அரசு எல்லா வகையிலும் தோல்வி அடைந்து உள்ளது. விவசாயிகள் தினந்தோறும் தற்கொலை செய்து கொள்கின்றனர். விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. மந்திரி பதவிக்காகவும், இலாகாவிற்கும் சண்டை நடந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மாநில அரசு கலைக்கப்பட வேண்டும். மாநில நிர்வாகம் முடங்கி கிடக்கும் சூழல் நிலவி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story