மும்பை - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் - மேற்கு ரெயில்வே அறிவிப்பு

மும்பை- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பை- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு ரெயில்
மும்பை - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அடுத்த மாதம் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.20 மணிக்கு பாந்திரா டெர்மினசில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (09041) செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். இதே ரெயில் (09042) மறுமார்க்கமாக அடுத்த மாதம் 30-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 1.40 மணிக்கு பாந்திரா டெர்மினஸ் வந்தடையும்.
நின்று செல்லும் இடங்கள்
இந்த ரெயில் போரிவிலி, வசாய் ரோடு, பன்வெல், லோனாவாலா, புனே, தவுண்ட், சோலாப்பூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். இந்த தகவலை மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.






