சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாநகராட்சியின் 131 மையங்களில் சிறப்பு பயிற்சி முகாம்


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாநகராட்சியின் 131 மையங்களில் சிறப்பு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 20 Jun 2023 7:30 PM GMT (Updated: 20 Jun 2023 7:30 PM GMT)

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பை மாநகராட்சி சார்பில் 131 மையங்களில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்..

மும்பை,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) மும்பை மாநகராட்சி சார்பில் 24 வார்டுகளிலும் யோகா மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "மாநகராட்சியின் 24 வார்டுகளில் 131 சிவ் யோகா மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக யோகா மற்றும் ஆரோக்கியமான வாழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) மேற்கண்ட சிவ் யோகா மையங்களில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. மேலும் பிட்னஸ் மும்பை பிரசாரத்தின் ஒரு பகுதியாக வருகிற டிசம்பர் மாதம் மாநகராட்சி சார்பில் மாராத்தான் ஓட்டப்பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Next Story