மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் லாரியில் திடீர் தீ; டிரைவர் உயிர் தப்பினார்


மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் லாரியில் திடீர் தீ; டிரைவர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 22 Oct 2023 12:30 AM IST (Updated: 22 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை அருகே நின்றிருந்த லாரியில் திடீரேன தீ விபத்து ஏற்பட்டது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

பால்கர்,

பால்கர் மாவட்டம் மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் குஜராத்தில் இருந்து மும்பை நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த லாரியை நேற்று மதியம் 2.30 மணி அளவில் திகாலே கிராமம் அருகே டிரைவர் நிறுத்தினார். அப்போது லாரியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட டிரைவர் ஏதோ அசம்பாவிதம் நடக்கபோவதை உணர்ந்து உடனடியாக தனது கேபினில் இருந்து குதித்து வெளியேறினார். சிறிது நேரத்தில் லாரியில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முயற்சி பலன் அளிக்கவில்லை. சிறிது நேரத்தில் லாரி முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று லாரியில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. சாதுர்யமாக செயல்பட்டதால் டிரைவர் உயிர் தப்பினார்.

1 More update

Next Story