மராத்தா பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் ராஜஸ்தான் பிரசாரத்தில் பட்னாவிஸ் மும்முரமாக இருக்கிறார்- சுப்ரியா சுலே குற்றச்சாட்டு

மராத்தா பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில்  ராஜஸ்தான் பிரசாரத்தில் பட்னாவிஸ் மும்முரமாக இருக்கிறார்- சுப்ரியா சுலே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Sep 2023 7:00 PM GMT (Updated: 14 Sep 2023 7:00 PM GMT)

மராத்தா பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் ராஜஸ்தான் பிரசாரத்தில் மும்முரமாக இருப்பதாக சுப்ரியா சுலே விமர்சித்துள்ளார்.

புனே,

மராத்தா பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் ராஜஸ்தான் பிரசாரத்தில் மும்முரமாக இருப்பதாக சுப்ரியா சுலே விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் பிரசாரம்

மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்துள்ளது. இதை முன்னிறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்தநிலையில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தொடர்பாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அங்கு சென்றுள்ளார்.

இதனை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

பட்னாவிஸ் மும்முரம்

மராட்டியத்தில் இன்று மராத்தா சமூகமாக இருந்தாலும் சரி, தக்கர்களாக இருந்தாலும் சரி, லிங்காயத்துகளாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி அனைவரும் அமைதியின்மையில் உள்ளனர். இருப்பினும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றொரு மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இது இந்த அரசின் அக்கறையற்ற அணுகுமுறையை மீண்டும் நிரூபிக்கிறது.

"மோடி இருந்தால் எதுவும் நடக்கும்" என்று வழக்கமாக கூறும் பா.ஜனதா கட்சி, மராத்தா சமூகங்களின் இடஒதுக்கீட்டுக்காக நாடாளுமன்றத்தில் பேசவேண்டும். இதற்கு தேசியவாத காங் கிரஸ் கட்சி முழு ஆதரவு வழங்கும். சமூக ஊடக பதிவு காரணமாக சதாராவில் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் இறந்த சம்பவம் குறித்து அரசு பதில் கூறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story