ஜல்னாவில் அரசு பஸ் மீது டெம்போ மோதி 5 பேர் பலி


ஜல்னாவில் அரசு பஸ் மீது டெம்போ மோதி 5 பேர் பலி
x

ஜல்னா அருகே அரசு பஸ் மீது டெம்போ மோதிய கோர விபத்தில் 5 பேர் பலியாகினர்.

மாவட்ட செய்திகள்

அவுரங்காபாத்,

ஜல்னா அருகே அரசு பஸ் மீது டெம்போ மோதிய கோர விபத்தில் 5 பேர் பலியாகினர்.

டெம்போ மோதி விபத்து

அவுரங்காபாத்தில் இருந்து ஜல்னா நோக்கி இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. ஜல்னா நெடுஞ்சாலை காடே ஜல்கான் கிராமம் அருகே வந்த போது எதிரே தொழிலாளிகளை ஏற்றி கொண்டு வந்த டெம்போ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென தடுப்பு சுவரின் மீது மோதியதோடு, அரசு பஸ் மீது மோதி விபத்தை ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

3 பேர் காயம்

மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 5 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் பலியானவர்கள் அசோக் சவான், பருடை சவான், சாந்திலாலர் சவான், ரஞ்சித் சவான், லாகு ராத்தோட் என அடையாளம் தெரியவந்தது.

நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தினால் அந்த வழியாக சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story