கனமழையை சமாளிக்க அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது - தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்


கனமழையை சமாளிக்க அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது - தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்
x
தினத்தந்தி 23 July 2023 7:45 PM GMT (Updated: 23 July 2023 7:45 PM GMT)

மராட்டியத்தில் பெய்து வரும் கனமழையை சமாளிக்க அரசு விழிப்புடன் செயல்பட்டு வருவதாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்

நாக்பூர்,

மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்தநிலையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- மாநிலத்தின் சில பகுதிகளில் 15 முதல் 20 நாட்களில் கிடைக்கும் சராசரி மழை அளவு, வெறும் 2 முதல் 3 நாட்களில் கிடைத்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைப்படி மாவட்டத்தில் அதிக மழைபெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடபட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் தேவைப்படும் பகுதிகளுக்கு விரைவாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். அரசு முழு முன் எச்சரிக்கையுடன் விழிப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story