மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
x

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

5,218 பேர் பாதிப்பு

மராட்டியத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 218 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இது நேற்றைய பாதிப்பை விட 60 சதவீதம் அதிகம் ஆகும். மாநிலத்தில் நேற்று 3 ஆயிரத்து 260 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதேபோல ஒருவர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்.

மாநிலத்தில் இதுவரை 79 லட்சத்து 50 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77 லட்சத்து 77 ஆயிரத்து 480 பேர் குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 867 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்து 47 ஆயிரத்து 893 பேர் வைரஸ் நோய்க்கு இதுவரை உயிரிழந்து உள்ளனர்.

மும்பை நிலவரம்

மும்பையில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 479 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒருவர் தொற்றுக்கு பலியானார். நகரில் இதுவரை 11 லட்சத்து ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 589 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பையில் தற்போது 13 ஆயிரத்து 617 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்Next Story