மனைவியை கொலை செய்து தற்கொலை நாடகமாடியவர் கைது


மனைவியை கொலை செய்து தற்கொலை நாடகமாடியவர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் மனைவியை கொலை செய்து தற்கொலை நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தாராவியில் மனைவியை கொலை செய்து தற்கொலை நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.

பெண் கொலை

மும்பை தாராவியில் வசித்து வருபவர் ரெகான் கான் (வயது29). இவரது மனைவி யஷோதாரா(24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் யஷோதாரா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். மனைவி தற்கொலை செய்து கொண்டதாக ரெகான் கான் கூறினார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் யஷோதாரா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கணவர் கைது

இதையடுத்து சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் கணவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ரெகான் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. ரெகான் கான் மனைவியை கொலை செய்து, அதை மறைக்க தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரெகான்கானை கைது செய்தனர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரெகான் கானும், யஷோதாராவும் கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2019-ம் ஆண்டு மும்பை வந்து உள்ளனர். இங்கு வந்த பிறகு ரெகான்கான், யஷோதாராவை கட்டாயப்படுத்தி மதமாற்றும் செய்து இறைச்சி சாப்பிட வைத்ததாகவும், குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்ததாகவும் யஷோதாராவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். யஷோதாரா கொலை செய்யப்பட்டது 'லவ் ஜிகாத்' எனவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

1 More update

Next Story