தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் தான் மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி தனஞ்செய் முண்டே பேச்சு

தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் தான் மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி என மந்திரி தனஞ்செய் முண்டே பேசி உள்ளார்.
மும்பை,
தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் தான் மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி என மந்திரி தனஞ்செய் முண்டே பேசி உள்ளார்.
அடுத்த முதல்-மந்திரி
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் தனஞ்செய் முண்டே மாநில சமூகநீதி துறை மந்திரியாக உள்ளார். இவர் இன்று பர்பானியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி தேசியவாத காங்கிரசை சேர்ந்தவராக இருப்பார் என்றார்.
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:-
சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசில் எனது பணியால் சமூகநீதி துறை மதிப்புமிக்கதாக மாறி உள்ளது. நாளை சமூகநீதி துறையை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தால், அதை அடுத்த முதல்-மந்திரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
மதிப்பை சம்பாதித்து உள்ளது
அடுத்த முதல்-மந்திரி நம்முடையவர் தான். முதல்-மந்திரி சமூகநீதி துறை நம்மிடமே இருக்கட்டும் என கூறுவார். அந்த துறை தற்போது அதிக மதிப்பை சம்பாதித்து உள்ளது. கடந்த ஆட்சியின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் என்னை சட்டமேல் சபை எதிர்க்கட்சி தலைவராக நியமித்தார். அவர்கள் அதிக பலம், நிலைத்தன்மையுடன் இருந்தபோது, அரசை அசைத்து பார்த்தேன்.
இவ்வாறு அவா் பேசினார்.






