மனைவிக்கு தொல்லை கொடுத்தவரை தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை- சாந்தாகுருசில் பயங்கரம்

மனைவியை துன்புறுத்தி வந்தவரை தட்டி கேட்டவர் குத்தி கொலை செய்யப்பட்டார்.
மும்பை,
மனைவியை துன்புறுத்தி வந்தவரை தட்டி கேட்டவர் குத்தி கொலை செய்யப்பட்டார்.
தட்டிக்கேட்டார்
தானே ராபோடி பகுதியை சேர்ந்தவர் பர்வேஜ் (வயது41). இவர் நேற்று முன்தினம் மும்பை சாந்தாகுருஸ் பகுதிக்கு வந்திருந்தார். அங்கிருந்த சையத் அகீல் (40) என்பவரை சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சையத் அகீல் தான் வைத்திருந்த கத்தியால் பர்வேஷ் சேக்கை சராமாரியாக குத்தினார்.
பட்டப்பகலில் நடந்த சம்பவத்தினால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கத்திக்குத்தில் காயமடைந்த பர்வேஷ் சேக்கை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பர்வேஷ் சேக் சிகிச்சை பலனின்றி பலியானார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி கைது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் அகிலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கல்லூரி பருவத்தில் பர்வேஷ் சேக்கின் மனைவியுடன் சையத் அகீல் பழகி வந்து உள்ளார். இந்த நிலையில் அப்பெண்ணை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு துன்புறுத்தி வந்தார்.
மனஉளைச்சல் அடைந்த பெண் தனது கணவர் பர்வேஷ் சேக்கிடம் தெரிவித்தார். இதன்படி பர்வேஷ் சேக் அவரை நேரில் சந்தித்து தட்டி கேட்க மும்பை வந்த போது இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்தது.






