டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் புதுப்பிக்கப்பட்ட சதுக்கம்- திறப்பு விழா இன்று நடக்கிறது

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் புதுப்பிக்கப்பட்ட சதுக்கம் திறப்பு விழா இன்று மும்பை தாராவியில் நடக்கிறது.
மும்பை,
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் புதுப்பிக்கப்பட்ட சதுக்கம் திறப்பு விழா இன்று மும்பை தாராவியில் நடக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட சதுக்கம்
"தினத்தந்தி"யின் மறைந்த அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நினைவாக மும்பையில் உள்ள தாராவி சயான் - பாந்திரா இணைப்பு சாலையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி சதுக்கம் திறக்கப்பட்டது.பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த அவர், விளையாட்டு, கல்வி, ஆன்மிகம் போன்ற துறைகளிலும் இமாலய சாதனை படைத்தவர். அவரது நினைவை போற்றும் வகையில் வெளிமாநிலத்திலும் சதுக்கம் அமைத்து சிறப்பிக்கப்பட்டது.
தற்போது அந்த சதுக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் சதுக்கம் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் தாராவியில் நடக்கிறது. புதுப்பிக்கப்பட்ட சதுக்கத்தை முன்னாள் மந்திரியும், தாராவி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வர்ஷா கெய்க்வாட் திறந்து வைக்கிறார்.
காமராஜர் பள்ளியில் விழா
இதைதொடர்ந்து காமராஜர் பள்ளியில் நடைபெறும் விழாவுக்கு திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாசன் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் சபேஷன் ஆதித்தன், செயலாளர் ஜெகதீஸ் சவுந்தர் முருகன், தெட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் செல்வராஜ், மும்பை கிளை சேர்மன் காசிலிங்கம், செயலாளர் மைக்கிள் ஜார்ஜ், பொருளாளர் பொன்ராஜ், பாக்கியநாதன், நடராஜன், ரெம்ஜிஸ், ஹரிராம் சேட், ஆனந்த் செல்வம், ஜான் கென்னடி முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மும்பை கிளை தலைவர் ரசல் நாடார், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ஜெபகுமார், துணை தலைவர் வடிவேல், இணைச்செயலாளர் மாரியப்பன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், கிளை மன்ற நிர்வாகிகள் செய்து உள்ளனர்.






