மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது


மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது
x

மராட்டியத்தில் நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தில் நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

நாளை தேர்வு முடிவு

மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-21-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறவில்லை. ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்தது. தேர்வுக்கு 16 லட்சத்து 38 ஆயிரத்து 964 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 506 பேர் ஆண்கள். 7 லட்சத்து 49 ஆயிரத்து 458 பேர் பெண்கள்.

மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள், பெற்றோர் இருந்தனர்.

இந்தநிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

மதிப்பெண் சரிபார்ப்பு

இதுகுறித்து பள்ளி கல்வி துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடந்த எஸ்.எஸ்.சி. தேர்வு முடிவுகள் 17-ந் தேதி (நாளை) மதியம் 1 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும். அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். தேர்வு முடிவுகளை mahresult.nic.in, sscresult.mkcl.org, ssc.mahresults.org.in, lokmat.news18.com ஆகிய இணைதள பக்கங்களில் மாணவர்கள் பார்க்கலாம். மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான பிறகு மதிப்பெண் சரிபார்ப்பு, விடைத்தாள், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் இதுகுறித்த கூடுதல் விவரங்களை verification.mh-ssc.ac.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-------------

1 More update

Next Story