உத்தரபிரதேசத்தில் தோட்டாக்களின் ஆட்சி நடந்து வருகிறது- பிரகாஷ் அம்பேத்கர் கூறுகிறார்

ஆதிக் அகமது கொலை சம்பவம் குறித்து பேசிய பிரகாஷ் அம்பேத்கேர் உத்தரபிரசேத்தில் தோட்டாக்களின் ஆட்சி நடைபெறுவதை காட்டுவதாக கூறியுள்ளார்.
மும்பை,
ஆதிக் அகமது கொலை சம்பவம் குறித்து பேசிய பிரகாஷ் அம்பேத்கேர் உத்தரபிரசேத்தில் தோட்டாக்களின் ஆட்சி நடைபெறுவதை காட்டுவதாக கூறியுள்ளார்.
அச்சத்தில் உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரும் போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது பத்திரிகையாளர்கள் போல நுழைந்த மர்ம கும்பல் அவர்களை சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் நேற்று கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கிற்கு பதிலாக தோட்டாக்கள் ஆட்சி செய்கிறது. அதற்கான விளைவுகளை அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அரசு சந்திக்க நேரிடும். இந்த கொலைக்கு மூளையாக செல்பட்டவர்களை அரசு கண்டுபிடிக்கவேண்டும். இந்த சம்பவத்தால் உத்தரபிரதேசம் அச்சத்தில் மூழ்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் கொந்தளிப்பு
அதேபோல அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மராட்டிய பூஷண் விருது வழங்கப்பட்டது குறித்து பேசிய வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர், "மராட்டிய பூஷண் விருதை யாருக்கு வழங்கவேண்டும் என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் விருது பெற்றவரின் சாதியை குறிப்பிடுவது ஆட்சேபனைக்குரியது" என்றார்.
மேலும் மராட்டிய அரசியலில் 15 நாட்களுக்குள் கொந்தளிப்பு ஏற்படும் என்று வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்தார். இருப்பினும் இதுகுறித்து விரிவாக ஏதும் கூற மறுத்துவிட்டார்.






