கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்- ஒருதலை காதலால் விபரிதம்


கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்- ஒருதலை காதலால்  விபரிதம்
x

கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

அவுரங்காபாத்,

அவுரங்காபாத்தில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற மாணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கழுத்தை அறுத்தார்

அவுரங்காபாத்தில் உள்ள தேவ்கிரி கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்த மாணவி சுக்பீரித் கவுர்(வயது 18). அதே கல்லூரியில் சரண்சிங் (18) என்ற மாணவரும் பயின்று வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவி சுக்பீரித் கவுர் சக மாணவியுடன் நடந்து சென்றார்.

அப்போது பின்னால் வந்த சரண்சிங் மாணவியை வழிமறித்தார். என்னை ஏன் காதலிக்கவில்லை என வாக்குவாதம் செய்தார். அப்போது சரண்சிங் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவி சுக்பீரித் கவுரின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

மாணவருக்கு வலைவீச்சு

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் இருந்த மாணவி போலீசாருக்கு தகவல் அளித்தார். இந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த சுக்பீரித் கவுரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் மாணவர் சரண்சிங் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். தப்பி சென்ற அவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. காதல் விவகாரத்தில் மாணவியை, மாணவர் கொலை செய்த சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-----

1 More update

Next Story