படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி நடிகையை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது
படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி நடிகையை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
மும்பை,
மும்பை ஒஷிவாரா பகுதியில் 27 வயது துணை நடிகை வசித்து வருகிறார். இவர் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பகுதி நேர வேலையும் செய்து வருகிறார். சமீபத்தில் அக்சய் (வயது29) என்பவர் நடிகையை தொடர்பு கொண்டு பேசினார். அவர் நடிகைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினார். அடுத்த சில நாட்களில் அவர், நடிகையை தொடர்பு கொண்டு உல்லாசத்துக்கு அழைத்தார். இதனால் ஆத்திரமடைந்த நடிகை அவரை கண்டித்து இணைப்பை துண்டித்தார். அதன்பிறகு அவர் தயாரிப்பாளர் ஒருவரின் முகவரியை நடிகைக்கு அனுப்பி வைத்தார். மேலும் தயாரிப்பாளரை சென்று சந்தித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினால் படவாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும் என்றார். இதைகேட்டு நடிகை ஆவேசம் அடைந்தார். நடிகைக்கும், வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாலிபர் நடிகையை அவதூறாக பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து நடிகை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.