சயிப் அலிகான் மீதான விசாரணை அடுத்த மாதம் தொடக்கம்


சயிப் அலிகான் மீதான விசாரணை அடுத்த மாதம் தொடக்கம்
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நடிகா் சயிப் அலிகான் வெளிநாட்டு தொழில் அதிபரை தாக்கிய வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

மும்பை,

நடிகா் சயிப் அலிகான் வெளிநாட்டு தொழில் அதிபரை தாக்கிய வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

தொழில் அதிபர் மீது தாக்குதல்

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் இக்பால் மிர்சர்மா. இவர் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் உள்ள வாசபி உணவகத்துக்கு சென்று இருந்தார். தொழில் அதிபருடன் அவரது மாமனார் ராமன் பட்டேலும் இருந்தார். அதே உணவகத்துக்கு நடிகர் சயிப் அலிகான், மனைவியும் நடிகையுமான கரீனா கபூர், அவரது சகோதரி கரிஷ்மா கபூர், நடிகைகள் மலைக்கா அரோரா, அம்ரிரா அரோரா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன் உணவகத்தில் இருந்தார்.

நடிகர் சயிப் அலிகான் குடும்பத்தினர், நண்பர்களுடன் சத்தமாக பேசி கொண்டு இருந்ததாக தெரிகிறது. அதற்கு தொழில் அதிபர் இக்பால் மிர்சர்மா ஆட்சேபனை ெதரிவித்தார். இதையடுத்து 2 தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு, நடிகர் சயிப் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள் இக்பால் மிர்சர்மா மற்றும் அவரது மாமனாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக இக்பால் மிர்சா்மா அளித்த புகாரின் போில் போலீசார் சயிப் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை எஸ்பிளனடே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை போலீசார் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. கோர்ட்டு கடந்த 24-ந் தேதி சயிப் அலிகான் மற்றும் நண்பர்கள் சகீல் லடாக், பிலால் அம்ரோகிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. மேலும் சாட்சிகளுக்கும் சம்மன் அனுப்பி உள்ளது.

1 More update

Next Story