மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 99 சதவீதத்தை தாண்டியது


மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 99 சதவீதத்தை தாண்டியது
x
தினத்தந்தி 27 Sept 2023 1:00 AM IST (Updated: 27 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 99 சதவீதத்தை தாண்டி உள்ளது.

மும்பை,

மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 99 சதவீதத்தை தாண்டி உள்ளது.

10 சதவீதம் குறைக்க முடிவு

மும்பையில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) போதிய மழை பெய்யவில்லை. இதனால் மும்பை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் பெரிய அளவில் அதிகரிக்காமல் இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் மும்பைக்கு குடிநீர் வழங்கும் தான்சா, பட்சா, மோதக் சாகர், துல்சி, விகார், மேல் வைத்தர்னா, மத்திய வைத்தர்னா ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் 90.65 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து மழை பெய்யாத பட்சத்தில் நகரில் குடிநீர் வினியோகத்தை 10 சதவீதத்தை குறைக்கும் அபாயம் இருந்தது. குடிநீர் வினியோகம் குறைப்பு தொடர்பாக அக்டோபர் மாதம் 1-ந் தேதி முடிவு எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

99.27 சதவீதம் நிரம்பியது

இந்தநிலையில் இந்த மாதம் பெய்த மழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 99.27 சதவீதம் தண்ணீர் உள்ளது. ஏரிகளின் மொத்த கொள்ளளவு 14 லட்சத்து 47 ஆயிரத்து 363 மில்லியன் லிட்டர் ஆகும். தற்போது ஏரிகளில் 14 லட்சத்து 36 ஆயிரத்து 788 மில்லியன் லிட்டர் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஏரிகளில் 98.68 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏரிகளில் உள்ள தண்ணீர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நகரின் தேவைக்கு போதுமானதாக இருக்கும் என அதிகாரி ஒருவர் கூறினார்.


Next Story