விநாயகர் சதுர்த்தியையொட்டி சுங்கச்சாவடி கட்டணம் தள்ளுபடி- ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு


விநாயகர் சதுர்த்தியையொட்டி சுங்கச்சாவடி கட்டணம் தள்ளுபடி- ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று முதல் வருகிற செப்டம்பர் 11-ந் தேதி வரை சுங்கக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் வருகிற 31-ந்தேதி முதல் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மராட்டிய மக்கள் தாங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து செல்வது வழக்கம். முக்கியமாக கொங்கன் வழித்தடமான ரத்னகிரி, சாவந்த்வாடி, சிந்தூர்க், குடல் போன்ற இடங்களில் சாலை போக்குவரத்தில் கடும் நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மராட்டிய அரசு மும்பை-பெங்களூரூ, மும்பை-கோவா நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று முதல் வருகிற செப்டம்பர் 11-ந் தேதி வரை சுங்கக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார். சுங்க கட்டண தள்ளுபடி பெற விரும்புவோர் மாவட்ட போக்குவரத்து ஆணையத்தை அணுகி முறையான அனுமதியை பெற்று கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளார்.

1 More update

Next Story