பிவண்டியில் திருநங்கை கல்லால் தாக்கி கொலை

பிவண்டியில் திருநங்கை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
தானே,
பிவண்டியில் திருநங்கை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
தகராறு
தானே மாவட்டம் பிவண்டி காய்பி நகர் பகுதியில் 2 திருநங்கைகள் வசித்து வந்தனர். திருநங்கைகள் 2 பேரும் சிறிய பிரச்சினைகளுக்கு கூட அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் 1.30 மணியளவிலும் வழக்கம் போல திருநங்கைகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் விலக்கிவிட முயன்றனர். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. எங்கள் சொந்த பிரச்சினையில் நீங்கள் தலையிட வேண்டாம் என அவர்கள் அக்கம்பக்கத்தினரை விரட்டி விட்டனர்.
கொலை
இந்தநிலையில் ஒரு திருநங்கை, 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு திருநங்கையை கல்லால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பிவண்டி டவுண் போலீசார் உடன் வசித்த திருநங்கையை கல்லால் தாக்கி கொலை செய்த மற்றொரு திருநங்கையை தேடி வருகின்றனர்.






