ஆபாச வீடியோ கால் வலையில் சிக்கி ரூ.2 லட்சம் பறிகொடுத்த அதிகாரி- கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு


ஆபாச வீடியோ கால் வலையில் சிக்கி  ரூ.2 லட்சம் பறிகொடுத்த அதிகாரி- கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
x

ஆபாச வீடியோ கால் வலையில் வீழ்த்தி நிதி நிறுவன அதிகாரியிடம் ரூ.2 லட்சம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

ஆபாச வீடியோ கால் வலையில் வீழ்த்தி நிதி நிறுவன அதிகாரியிடம் ரூ.2 லட்சம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆபாச வீடியோ கால்

மும்பையில் செயல்படும் நிதி நிறுவனத்தில் 57 வயது நபர் ஒருவர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சனிக்கிழமை வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் ஆபாச வீடியோ காலில் விருப்பமா? என கேட்கப்பட்டு இருந்தது. இதில் சபலம் அடைந்த அதிகாரியும் 'ஓகே' என சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து பெண் ஒருவர் அதிகாரிக்கு வீடியோ கால் செய்து ஆபாச செயலில் ஈடுபட்டார். மேலும் அதிகாரியின் ஆடைகளையும் கழற்றுமாறு கூறினார். அதன்படியே அதிகாரியும் செய்தார். இதை அந்த பெண் ரெக்கார்டு செய்து வைத்து உள்ளார்.

மிரட்டி பணம் பறிப்பு

இந்தநிலையில் அதிகாரிக்கு அடிக்கடி போன் அழைப்பு வந்தது. அவர்கள் பெண்ணிடம் ஆபாசமாக வீடியோ காலில் பேசியதை பகிரங்கப்படுத்தி விடுவோம் எனக்கூறி அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். இதேபோல டெல்லி போலீஸ் என கூறிக்கொண்டும் ஒருவர் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசி பணம் கேட்டு மிரட்டினார். இதேபோல ஆபாசமாக பேசிய பெண்ணும், வீடியோ கால் காட்சிகளை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டினார்.

இந்த தொந்தரவில் இருந்து மீண்டால் போதும் என நினைத்த அந்த அதிகாரி, சம்பந்தப்பட்ட கும்பலுக்கு ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் அனுப்பினார். எனினும் அந்த கும்பல் மேலும் பணம் கேட்டு அதிகாரியை மிரட்டியது. இதையடுத்து அவர் தனக்கு நேர்ந்த கதி குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாச வீடியோ கால் வலையில் வீழ்த்தி நிதி நிறுவன அதிகாரியிடம் பணம் பறித்த கும்பலை தேடி வருகின்றனர்.

-----------

1 More update

Next Story