மாடல் அழகிக்கு ஆபாச தொல்லை:- டி.வி. நடிகர் கைது

மாடல் அழகிக்கு ஆபாச தொல்லை கொடுத்த டி.வி. நடிகரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மாடல் அழகிக்கு ஆபாச தொல்லை கொடுத்த டி.வி. நடிகரை போலீசார் கைது செய்தனர்.
ஆபாச தகவல்
மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த 27 வயது நடிகையும் மாடல் அழகியுமான ஒருவர் சமீபத்தில் பாங்குர் நகர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது பெயரில் யாரோ போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அதன் மூலம் தனக்கும், தனது குடும்பத்தினர், நண்பர்களுக்கும் ஆபாச தகவல்களை அனுப்பியதாக கூறியிருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நடிகர் கைது
அப்போது நடிகையின் பெயரில் போலி கணக்கு தொடங்கி அவரை துன்புறுத்தியவர் நடிகரும், டி.வி. தொடர் தயாரிப்பாளருமான சுர்ஜித் சிங் ரதோர் (27) என்பது தொியவந்தது. அவரை போலீசார் அந்தேரி போர்பங்களா பகுதியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுர்ஜித்சிங் ரதோர் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தேசிய துணை தலைவராகவும் உள்ளார்.






