ராகுல் செவாலே தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத்துக்கு சம்மன் - மும்பை கோர்ட்டு உத்தரவு

ராகுல் செவாலே தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத்துக்கு சம்மன் - மும்பை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Jun 2023 7:45 PM GMT (Updated: 27 Jun 2023 7:46 PM GMT)

ராகுல் செவாலே தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி.க்கு சம்மன் பிறப்பித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

ராகுல் செவாலே தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி.க்கு சம்மன் பிறப்பித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மானநஷ்ட வழக்கு

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்தவர் ராகுல் செவாலே எம்.பி.. கடந்த ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி சாம்னாவில் இவருக்கு எதிராக 'ராகுல் செவாலேக்கு கராச்சியில் ஓட்டல், ரியல் எஸ்டேட் தொழில் உள்ளது' என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. கட்டுரைக்கு ஆட்சேபனை தெரிவித்து ராகுல் செவாலே மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முன்னாள் முதல்-மந்திரியும் சாம்னா தலைமை ஆசிரியருமான உத்தவ் தாக்கரே, சாம்னா நிர்வாக ஆசிரியரான சஞ்சய் ராவத் எம்.பி.க்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். வழக்கில், "ராகுல் செவாலேவின் அரசியல் வாழ்க்கையை களங்கப்படுத்தும் வகையிலும், பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் கற்பனையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது" என கூறப்பட்டு இருந்தது.

விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த, மும்பை சிவ்ரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு எஸ்.பி. காலே, வழக்கு தொடர்பாக பதில் அளிக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி.க்கு சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் அடுத்த மாதம் 14-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகவும் 2 பேருக்கும் உத்தரவிட்டார். மானநஷ்ட வழக்கில் உத்தவ் தாக்கரேக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story