மாநகராட்சி சிவசேனா அலுவலகத்தை கைப்பற்ற முயன்ற ஷிண்டே அணியினர்- உத்தவ் அணியினருடன் மோதலால் பரபரப்பு

மும்பை மாநகராட்சியில் சிவசேனா அலுவலகத்தை கைப்பற்ற உத்தவ், ஷிண்டே அணியினர் மோதிக்கொண்டனர். போலீசார் அவர்களை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பை மாநகராட்சியில் சிவசேனா அலுவலகத்தை கைப்பற்ற உத்தவ், ஷிண்டே அணியினர் மோதிக் கொண்டனர். போலீசார் அவர்களை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சி அலுவலகத்தில் திரண்டனர்
மும்பை சி.எஸ்.எம்.டியில் மாநகராட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சிவசேனா கவுன்சிலர்களுக்கான கட்சி அலுவகம் உள்ளது. இந்த கட்சி 2 ஆக உடைந்த நிலையில் நேற்று திடீரென இந்த மாநகராட்சியில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியினர் உள்ளே புகுந்தனர். அவர்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டு தாங்கள் தான் உண்மையான சிவசேனா என கோஷம் போட்டனர். இந்த அலுவலகம் தங்களது அணிக்கே சொந்தம் என்று உரிமை கோரினர்.
மோதல்
இது பற்றி அறிந்த உத்தவ் பாலாசாகேப் சிவசேனாவினர் அங்கு திரண்டனர். இதனால் இரு தரப்பு இடையே பெரும் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சமரசத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் மோதல் தொடரவே அவர்களை போலீசார் வெளியேற்றினர். இந்த சம்பவம் மும்பை மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






