லாரிகள் மோதி பலியான 9 பேரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி- உத்தவ் தாக்கரே அறிவிப்பு


லாரிகள் மோதி பலியான 9 பேரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி- உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x

லாரிகள் மோதி பலியான 9 பேரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்து உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

நாக்பூர்,

சந்திராப்பூர் புறநகர் பகுதியில் உள்ள சந்ராப்பூர்- முல் சாலையில் அஜய்பூர் அருகே நேற்று மரக்கட்டைகள் ஏற்றிவந்த லாரியும், டீசல் டேங்கர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த லாரிகள் மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயில் இரு லாரிகளில் இருந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு, நிதியுதவியை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்-மந்திரி அலுவகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சந்திரப்பூர் விபத்து சம்பவத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மிகுந்த கவலை தெரிவித்ததுடன், முதல்-மந்திரி நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-----


Next Story