தொடர் மழையால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் விகார் ஏரி நிரம்பியது


தொடர் மழையால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் விகார் ஏரி நிரம்பியது
x

தொடர்மழையால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 5-வதாக விகார் ஏரி நிரம்பியது.

மும்பை,

தொடர்மழையால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 5-வதாக விகார் ஏரி நிரம்பியது.

விகார் ஏரி

மும்பையில் பெய்த பருவமழை காரணமாக குடிநீர் வழங்கும் ஏரிகளான மோடக் சாகர், தான்சா, துல்சி, பாட்சா ஆகிய ஏரிகள் ஏற்கனவே நிரம்பின. மேல்வைத்தர்னா, வைத்தர்னா மற்றும் விகார் ஏரிகள் நிரம்பும் நிலையில் காணப்பட்டது.

மும்பையில் சமீபத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் 5-வதாக விகார் ஏரி முழு கொள்ளளவு எட்டியதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

93.66 சதவீதம்

இந்த ஏரியில் இருந்து தினமும் மும்பைக்கு 3 ஆயிரத்து 850 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் 13 லட்சத்து 55 ஆயிரத்து 637 மில்லியன் லிட்டர் அதாவது 93.66 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

இந்த நீர் இருப்பு மும்பைக்கு 352 நாட்களுக்கு போதுமானதாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 80 சதவீதம் நீர் இருப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story