நடிகை கேதகி சிதாலே மீது மட்டும் நடவடிக்கை ஏன்? தேசிய பெண்கள் ஆணையம் கேள்வி


நடிகை கேதகி சிதாலே மீது மட்டும் நடவடிக்கை ஏன்? தேசிய பெண்கள் ஆணையம் கேள்வி
x

சரத்பவாருக்கு எதிராக முகநூல் பதிவு விவகாரத்தில் நடிகை கேதகி சிதாலே மீது மட்டும் நடவடிக்கை ஏடுக்கப்பட்டது ஏன் என தேசிய பெண்கள் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

நவிமும்பை கலம்பொலி பகுதியில் வசித்து வருபவர் மராத்தி நடிகை கேதகி சிதாலே. இவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு எதிராக முகநூலில் அவதூறு பதிவு போட்டதாக கடந்த மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கேதகி சிதாலே மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் அவர்கள், சரத்பவார் தொடர்பான முகநூல் பதிவை ஏற்கனவே பலர் பகிர்ந்து உள்ள நிலையில், கேதகி சிதாலே மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மராட்டிய போலீசாருக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.

1 More update

Next Story