பாண்டுப்பில் 18-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை - காரணம் குறித்து போலீஸ் விசாரணை

பாண்டுப்பில் 18-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
பாண்டுப்பில் 18-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனநலம் பாதித்த பெண்
மும்பை பாண்டுப்பை சேர்ந்த பெண் ரீனா சோலங்கி (வயது47). இவர் திரிவேணி சங்கம் ஹவுசிங் சொசைட்டி கட்டிடத்தின் 18-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 3 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் நேற்று காலை 18-வது மாடியின் கண்ணாடி ஜன்னல் பகுதியில் நாற்காலியில் ஏறி நின்றார். பின்னர் அங்கிருந்து திடீரென கீழே குதித்து விட்டார்.
போலீசார் விசாரணை
இதில், படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே ரீனா சோலங்கி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






