வைத்தர்ணா ரெயில்வே பால கால்வாயில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு
வைத்தர்ணா ரெயில்வே பாலத்தின் கீழே உள்ள கால்வாயில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது
வசாய்,
பால்கர் மாவட்டம் வைத்தர்ணா ரெயில்வே பாலத்தின் கீழே கால்வாயில் நேற்று முன்தினம் மாலை பெண் உடல் கிடப்பதாக மிராபயந்தர்-வசாய்விரார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் அழுகிய நிலையில் கிடந்ததால் பெண்ணை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாண்டவி போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் காணாமல் போனதாக யாரேனும் புகார் அளித்து உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story