பளு தூக்குதலில் புதிய தேசிய சாதனை: டெருவுக்கு அருணாசல பிரதேச முதல் மந்திரி கண்டு வாழ்த்து

பளு தூக்குதலில் புதிய தேசிய சாதனை:  டெருவுக்கு அருணாசல பிரதேச முதல் மந்திரி கண்டு வாழ்த்து
x
தினத்தந்தி 29 Dec 2016 3:32 PM GMT (Updated: 29 Dec 2016 3:32 PM GMT)

பளு தூக்குதல் போட்டியில் புதிய தேசிய சாதனை மற்றும் மூத்த தேசிய சாம்பியன் ஆகிய சாதனைகளை படைத்துள்ள பளு தூக்குதல் வீரர் ஜிம்ஜாங்க் டெருவுக்கு அருணாசல பிரதேச முதல் மந்திரி பெமா கண்டு இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.

இட்டாநகர்,

பளு தூக்குதல் போட்டியின் 92 கிலோ எடை பிரிவில் புதிய தேசிய சாதனை மற்றும் மூத்த தேசிய சாம்பியன் ஆகிய சாதனைகளை படைத்துள்ளார் பளு தூக்குதல் வீரர் ஜிம்ஜாங்க் டெரு.

இது பற்றி டெருவை பாராட்டி கடிதம் எழுதியுள்ள கண்டு அதில், பளு தூக்குதலில் இதற்கு முந்தைய அனைத்து தேசிய சாதனைகளையும் உடைத்து புதிய மூத்த தேசிய சாம்பியனாகி உள்ளீர்கள் என்ற செய்தியினை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

உண்மையில் நமக்கு தெரிந்து இது ஒரு வரலாறு உருவாக்கம் ஆகும்.  இது சற்றே ஒரு தொடக்கம் என நம்புவோம்.  உங்களது வருங்கால முயற்சிகளில் பல சாதனைகள் முறியடிக்கப்படுவதுடன், பல புதிய மைல்கற்களை அமைத்திடுவீர்கள் என்றும் கூறியுள்ளார்.

Next Story