இந்தியன் ஓபன் காலிறுதியில் சாய்னா நேவாலை வீழ்த்தினார் பி.வி.சிந்து


இந்தியன் ஓபன் காலிறுதியில் சாய்னா நேவாலை வீழ்த்தினார் பி.வி.சிந்து
x
தினத்தந்தி 31 March 2017 2:12 PM GMT (Updated: 31 March 2017 2:21 PM GMT)

இந்தியன் ஓபன் காலிறுதியில் சாய்னா நேவாலை பி.வி.சிந்து வீழ்த்தினார்.

புதுடெல்லி,

2017ஆம் ஆண்டுக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஒலிம்பிக் பதக்க மங்கை பி.வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் மோதினர். பரபரப்பான ஆட்டத்தில் 21-16, 22-20 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து சாய்னாவை வீழத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் தென் கொரியாவின் சுங் ஜி ஹியூனை எதிர்த்து பிவி சிந்து எதிர்கொள்கிறார்.  இந்திய வீராங்கனைகளுக்குள் போட்டி நடைபெற்றதால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

Next Story