தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாய் பிரணீத் சாம்பியன்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
பாங்காக்,
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியுடன் இந்தியாவின் சாய் பிரணீத் மோதினார். இப்போட்டியில் 17-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியை பிரணீத் வீழ்த்தினார்.
முதல் செட்டை கிறிஸ்டியிடம் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் இழந்த பிரணீத் அடுத்த செட்டில் 9-3 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றார். ஆனால் அடுத்தடுத்த ஆட்டத்தில் 6 புள்ளிகளை பெற்ற கிறிஸ்டியால் செட் சமனானது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரணீத் அந்த செட்டை கைப்பற்றினார்.
இதனால் 3வது செட்டை விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த செட்டையும், 2 புள்ளிகள் வித்தியாசத்தில் கைப்பற்றி போட்டியையும் பிரணீத் கைப்பற்றினார். 72 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிரணீத் சாம்பியன் பட்டத்தினை வென்றார்.
Related Tags :
Next Story