முதல்நிலை வீரர் வான்-ஹோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் ஸ்ரீகாந்த்


முதல்நிலை வீரர் வான்-ஹோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் ஸ்ரீகாந்த்
x
தினத்தந்தி 17 Jun 2017 2:56 PM GMT (Updated: 17 Jun 2017 2:56 PM GMT)

இந்தோனேஷியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் முதல்நிலை வீரர் வான்-ஹோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்.

ஜகர்தா,

இந்தோனேஷியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சான் வான்-ஹோவும் 22வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில்  ஸ்ரீகாந்த் 21-15, 14-21, 24-22 என்ற செட் கணக்கில் வான் -ஹோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

முதல் செட்டில் ஸ்ரீகாந்த் எளிதான வெற்றி பெற்றார். இரண்டாவது செட்டில் வான்-ஹோ வெற்றி பெற்றதனால் ஆட்டம் சூடு பிடித்தது.  மூன்றாவது செட்டில் இருவரும் வெற்றி பெறும் முனைப்போடு விளையாடினர். இறுதியில் ஸ்ரீகாந்த் 24-22 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

அவர் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் ஜப்பானின் கஜுமச சாகை எதிர்கொள்கிறார்.
 
ஸ்ரீகாந்த் கடந்த மாதம் சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் போட்டிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பிரனாய் மற்றும் ஜப்பானின் கஷுமசா மோதினர். இப்போட்டியில் பிரனாய் தோல்வியடைந்தார். பிரனாய் காலிறுதி போட்டியில் மூன்றாம் இடத்தில் இருக்கும் லீ சோங் வீயை வென்று அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

Next Story