இந்தோனேஷிய ஒபன் பேட்மிண்டன் தொடர் : இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி சாம்பியன்


இந்தோனேஷிய ஒபன் பேட்மிண்டன் தொடர் : இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி சாம்பியன்
x
தினத்தந்தி 18 Jun 2017 1:18 PM GMT (Updated: 18 Jun 2017 1:18 PM GMT)

இந்தோனேஷிய ஒபன் பேட்மிண்டன் தொடர் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஜகர்தா,

மொத்தம் ரூ.6½ கோடி பரிசுத் தொகைக்கான இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ்பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. அரை இறுதியில் உலக தரவரிசையில் 22-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், நம்பர் ஒன் வீரரான தென்கொரியாவின் சன் வான் ஹோவை சந்தித்தார். 1 மணி 12 நிமிடம் விறுவிறுப்பாக நடந்த இந்த மோதலில் ஸ்ரீகாந்த் 21-15, 14-21, 24-22 என்ற செட் கணக்கில் சன் வான் ஹோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீரரை 21-11, 21-19 என்ற நேர் செட்களில் வீழ்த்தி  ஸ்ரீகாந்த். சாம்பியன் பட்டத்தை  வென்றார்.

Next Story