குத்துச் சண்டை போட்டியின் போது முன்னாள் சாம்பியன் மரணம்


குத்துச் சண்டை போட்டியின் போது முன்னாள் சாம்பியன் மரணம்
x
தினத்தந்தி 20 Jun 2017 10:18 AM GMT (Updated: 20 Jun 2017 10:18 AM GMT)

கனடாவில் நடந்த குத்துச் சண்டை போட்டியின் போது, காயம் அடைந்த முன்னாள் சாம்பியன் டிம் ஹாக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் குத்துச் சண்டை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் கடந்த வெள்ளிக் கிழமை நடந்த குத்துச் சண்டை போட்டியில் கனடிய வீரரும், முன்னாள் சாம்பியனுமான டிம் ஹாக் சக நாட்டைச் சேர்ந்த ஆடம் பிரைடுவுட்டுடன் மோதினார்.

பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த குத்துச் சண்டை போட்டியின் போது, ஆடம் பிரைடுவுட் -தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அவரது தாக்குலை சமாளிக்க முடியாமல் டிம் ஹாக்  திணறினார். ஒரு கட்டத்தில் மேடையிலே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கோமா நிலைமைக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது தங்கைஜாக்கி நெயில் நேற்று, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதும், சிகிச்சை பலனின்றி டிக் ஹாக் இறந்தவிட்டதாக வருத்ததுடன் தெரிவித்தார்.

முன்னாள் சாம்பியனான அவரது இழப்பு குத்துச்சண்டை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story